Posts

Showing posts from May, 2020

அவன் ஒரு சாமுராய்.

Image
"அவன் ஒரு சாமுராய். போர்க்குணம் கொண்டவன். வாள்வீச்சு, குதிரையேற்றம், வேலெறிதலில் வல்லவன்." Pic Courtesy: Google "தாய்மொழிப்பற்று நிறைந்தவன். கவிப்படுவதிலும் கைத்தேர்ந்தவன்." Pic Courtesy: Google "சிறுவயதில் பெற்றோரை இழந்தவன். ரோனின் சாமுராயால் வளர்க்கப்பட்டவன். சாமுராயாய் வளர்ந்தவன்." Pic Courtesy: Google "மாமன்னனின் மெய்காப்பாளன் அவன். மாமன்னன் மகளின் நெஞ்சம் கவர்ந்த கள்வன்." Pic Courtesy: Google "தன் தலைவன் மாமன்னன் மீது பெரும்மதிப்பும். தன் தலைவன் மகளான அவள்மீது பெருங்காதலும் கொண்டவன்." Pic Courtesy: Google "எல்லாமிருந்தும் ஏதுமில்லாததாய் உணர்பவன். தனிமை சிறையில் வாடுபவன்." Pic Courtesy: Google "நேரெதிர் எண்ணங்களையும், சிந்தனைகளையும் ஒரு சேர கொண்டவன். நெடுந்துயரில் வாடுபவன்." Pic Courtesy: Google "முழு உலகையும் வென்றிடும் ஆற்றல் உடையவன். மூச்சற்று மூளையில் முடங்கவும் கூடியவன்." Pic Courtesy: Google "முடிவை விரும்பாதவன். எடுத்த முடிவில் உறுதியாயிருப்பவன்." Pic Courtesy: Google "...

பராசக்தி - இன்றும் உயிர்ப்போடு இருக்கும் அந்த சொற்கள்

Image
     இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.      கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று.       இல்லை, நிச்சயமாக இல்லை.       கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.       உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக  பாதிக்கப்பட்டேன்.  சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது.  ...