பெண் ❤️
பெண். பெரும் அன்பும், பெரும் ஆற்றலும் கொண்டவள். தேவையேற்படுமின் பெருஞ்சீற்றமும். (நல்லது) ஆவதும் பெண்ணாலே; (தீயது) அழிவதும் பெண்ணாலே. அண்ட் வைஸ் வெர்சா. பெண் – ஏமாறுகிறாள், ஏமாற்றப்படுகிறாள். பெண் ஏமாறும் காரணிகள் இரண்டு – அன்பு, அழகு. இதை ஆண்களின் நா அறிந்துள்ளது. பெண்ணின் விடுதலை பெண்ணின் கையில். அதற்கு மிகப்பெரும் எதிரியும் பெண்தான். பெண் – தேவதை என போற்றப்படுகிறாள். அல்லது தே*** என்று தூற்றப்படுகிறாள். ஒருபோதும் அவளும் சகமனுசி என்று ஏற்றுக்கொள்ளப்படுவதேயில்லை. அவள் உணர்ச்சிகள், உணர்வுகள் மதிக்கப்படுவதேயில்லை. பெண் – புனிதம் கற்பிக்கப்பட்டே புதைக்கப்பட்டவள். பெண் மெய்யாகவே புரியாத புதிரா? இல்லை, அவ்வாறு மாயை உருவாக்கப்பட்டதா? புரிந்துக்கொள்ள முயற்சி செய்யப்படவே இல்லையா? Taken for granted? இதுவும் பெண்ணைப்பற்றிய ஒரு ஆணின் புரிதல்தான். சரியாக இருக்க வாய்ப்பில்லைதான். பெண்.