நான் பார்த்த பேய்கள் | My Encounter with Ghosts - 2
மாயா வந்த நேரம்.
அன்று மழைத்தூரி ஓய்ந்த இரவு. சற்றும் சலனமில்லாத இரவு. நண்பனின் மொட்டைமாடி அறையில் இரவு ச்டேயிங். இரவு 10 மணிபோல இருக்கும். இரவு சாப்பாடு முடிச்சிட்டு, ஒரு நல்ல படம் பாக்கலாம்னு டாரெண்ட்ச்ல போயி ‘மாயா’ டவுன்லோடுனோம்.
மாயா, முதல் டைட்டில் சீனே கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. என் நண்பன் எதற்கும் துணிஞ்சவன், பேய்க்கிலாம் பயப்படற ஆள் கிடையாது. எனக்குதான் பேய்னா கொஞ்சம் பயம். இரவுல பேய்ப்படம் பாக்கும்போது சொல்லவே வேணாம்.
படம் நல்லா, த்ரில்லா போயிட்டிருந்தது. நயன்தாராவோட நடிப்ப ரசிச்சிகிட்டே நானும் பாத்திட்டு இருந்தேன். டைரக்டர மீட் பண்ணி mock acting பண்ற சீன், குழந்தை அழும்போது வர்ற BGM எல்லாம் வேற லெவல்ல இருந்தது.
| Pic Courtesy: Google |
அந்த ப்ரொடியூசர் படம் பாத்திட்டிருக்கும்போது, மாயா வந்து அவர இழுத்திட்டுபோய் கொலைபண்ற சீன் போய்ட்டிருக்கு. அந்த நேரம் பாத்து என் நண்பன், “மச்சி யூரின் வருதுடா, போயிட்டு வந்துறேன்”-னான்.
டாய்லெட் அந்த அறையில கிடையாது. அறையவிட்டு வெளில வந்து, மொட்டைமாடி ஓரத்திலே இருக்கு. நான் போகாதடா படம் முடிஞ்ச பின்ன போய்க்கலாம்னு சொன்னேன். அவன் ரொம்ப அர்ஜென்ட்டா வருதுன்னு எழுந்து போய்ட்டான்.
வெளில போனா ஒரே இருட்டு, இருட்டுல எல்லாமே பேய் மாதிரிதான் தெரியும். எதுக்கு வம்புன்னு நானும் வேற வழியில்லாம படத்த பாத்துட்டே அறைக்குள்ளயே இருந்துட்டேன்.
இப்போ நயன்தாரா தியேட்டருக்குள்ள போற சீன் வந்துருச்சு. நயன்தாரா போய் அந்த சீட்ல உக்காந்து, தியேட்டர்ல படம் ஸ்டார்ட் ஆகுது, டமார்னு ஒரு சத்தம்.
எனக்கு அல்லு கெளம்பிருச்சு.
பவர் கட், ஒரே இருட்டு. Luckily, Laptop is still ON and அந்த வெளிச்சம் மட்டுந்தான் அறைமுழுக்க இருக்கு. ஒன்னுக்கு அடிக்கபோன இவன வேற காணோம்.
லேப்டாப்’லயும் அதுக்குள்ள, அந்த தியேட்டர்லயும் படம் ஓடிட்டே இருக்கு. எனக்கு பயம் உச்சத்தில. அந்த நேரம் பாத்து எதிரே உள்ள சன்னல்ல ஒரு நிழல். இந்த படத்துல உள்ளது மாதிரியே. Second time in my life, heart is in the mouth-ங்கற அளவுக்கு பயத்த உணர்ந்தேன்.
குப்புனு ஒரு அமைதி, ஒரு வித பயம். அந்த நிழல் சன்னல விட்டு விலகி பக்கத்துல உள்ள கதவ திறந்துச்சு. அந்த நொடிய சொற்களால் எழுத முடியாது.
அப்படியொரு திகில், பயம் கலந்த உணர்வு அது. முழுதும் கதவ திறந்து, “என்னடா இருட்டுல உக்காந்திருக்க”ன்னு LED flashlight-அ ஆன் பண்ணான், என் நண்பன்.
“எனக்கு எதிரி வேற யாருமில்லடா”ன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு, கொஞ்ச கொஞ்சமா பயத்துல இருந்து மீண்டு வந்தேன். ஆனா, அந்த சன்னல் & கதவ திறந்த நேரத்துல வந்த பயமிருக்கே. செத்து பிழைத்த தருணம்.
இது முதல் சம்பவம் அளவுக்கு பயங்கரம் இல்லனாலும், இது கொடுத்த அந்த திகிலுணர்வு இன்றும் நான் மறவ முடியாதது.
Read my other posts here - Index
Comments
Post a Comment