உளவியல் சுரண்டல் - Psychological Exploitation in Politics, Advertising and Marketing
ஒரு செய்திய நாம நல்லா விளங்கிக்கனும்; இன்னைக்கு முழு உலகளவுலயும் எல்லா துறைச்சார்ந்த ஆய்வுகள் நடக்குது. இந்த ஆய்வுகள் ஒரு காலத்துல தனி நபர்கள் செய்தார்கள் say scientists, ஆனா இப்போ பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிகள் தான் நடத்துறாங்க.
அந்த ஆய்வுகள அடிப்படையா வச்சு, அவங்க பொருட்கள் தயாரித்து, உலகம் முழுக்க விற்பனை செய்றாங்க. இந்த விற்பனை செய்றாங்க இல்லையா.. இதற்கும் ஆய்வு செய்வாங்க.. எப்படி விற்பனை செய்றதுன்னு. அந்த ஆய்வுகளின் முடிவு படி மார்க்கெட்டிங் பண்ணுவாங்க, இதுதான் முக்கிய பகுதி.
மார்கெட்டிங்ல முதல் அந்த பொருளுக்கு target consumers யாருன்னு ஆய்வு நடக்கும். அப்பறம் அந்த consumers ஓட விருப்பு, வெறுப்பு, insecurities, complex பத்தி ஆய்வு நடக்கும். அத அடிப்படையா வச்சு அந்த பொருட்கள விற்பனை செய்வாங்க. எ. கா – Fair and Lovely, Colgate etc.,
Fair and lovely பத்தி தெரியாதவங்க நம்மில் இருப்பது அபூர்வம்தான். இந்த பொருளின் target consumers dark complexion கொண்ட, தாழ்வு மனப்பான்மை கொண்டவங்க. அப்படியே கருப்பா இருப்பது பற்றி கவலையில்லாதவங்களா இருந்தாலும் விளம்பரம் தயாரித்து அந்த மனப்பான்மை உருவாக்குவாங்க.
இதேமாதிரி, Colgate (வெண் பற்கள்), Kellogs Corn Flakes (Slimming for fat wo/men), Baby’s Cereals (கொழுகொழு babies – which is not essentially a sign of healthy child). இதுமாதிரி இன்னும் நிறைய Marketing & Advertising அடிப்படை என்னன்னா… மக்களின் insecurities & inferiority complex தான். இதற்கு எளிதில் சிக்குபவர்கள் பெண்கள் தான்.
சரி இப்போ.. நாம main subject உள்ள போவோம்.. நா இங்க முதலும் முக்கியமுமா பேச வந்தது.. behavioral psychology பத்தி. Behavioral Psychology-இன் நேரடி பொருள் நடத்தை / நடவடிக்கை உளவியல். அதாவது, மனிதனின் நடவடிக்கைகளின் அடிப்படையில் அவனின் உளவியலை / உள்ளத்தின் ஓட்டத்தை அறிவது. இந்த Behavioral Psychology ஆய்வை வைத்து மனிதர்க்கு நன்மை பயக்கும் காரியங்களும் செய்யலாம். எ.கா ஒரு மனிதனின் bad habits-ஐ மாற்ற Behavioral Psychology பயன்படுத்தி முடியும்.
அதே நேரத்தில், Behavioral Psychology வைத்து மக்களை சுரண்டவும் முடியும். எ.கா- Marketing, Advertising, E-commerce, Social Media, News and Media இவையாவும் இதையே செய்கின்றன. அதெப்படி Behavioral Psychology வச்சு மக்களை சுரண்ட முடியும்னு கேக்குறிங்களா.. சொல்றேன்.. அதற்கு நாம் ஒவ்வொருவரிடமும் சாட்சி இருக்கு.. நாம் ஒவ்வொருவரும் அவ்வாறு exploit செய்யப்பட்டுள்ளோம்.
மக்களை சுரண்டுதல் என்றால் நா இங்க மீன் பண்ணுவது, அவங்க பலகீனங்கள (குண்டு/ஒல்லி/குள்ளம்/ஏழ்மை etc.,) முதலா வச்சு அவங்கள டார்கெட் பண்ணி பொருள தலையில கட்டுறது.
பிகேவியரால் சைக்காலஜில ஒரு கான்செப்ட் இருக்கு – "மனிதன் உண்மையை கண்டறிவதை விட, தன் உள்ளத்திற்கு பிடித்தமான/ஏதுவான கருத்துகளையே ஏற்றுக்கொள்வான். பின்பு அந்த கருத்துகளுக்கு logical reasoning செய்து தன்னை திருப்திப்படுத்திக்கொள்வான்."
இந்த அடிப்படைல உளவியல் வல்லுநர்கள் சொல்லுவாங்க, “People think with their emotions, not with intelligence. All the everyday human decisions are made emotionally, not intellectually.”
So, மனிதன் தன் முடிவுகளை எமோஷனல் ரீதியாதான் எடுப்பான். இத எப்படி மார்க்கெட்டிங்ல யூஸ் பன்றாங்க, இத எப்படி பொலிடிக்கல் campaign-ல யூஸ் பன்றாங்க?
மார்க்கெட்டிங் பண்ணும்போது என்ன செய்வாங்கன்னா, அந்த பொருளோட டார்கெட் கன்சுமெர்ஸ்ச எப்படி எமோஷனலா அட்ராக்ட் பண்ணலாம்னு ஆய்வு பண்ணுவாங்க. அதுல அவங்களோட முன்ன சொன்னதுபோல insecurities, inferiority complex, likes, dislikes எல்லாம் டேப் பண்ணுவாங்க.
இதுக்கு பல வழிகள் இருக்கு, இந்த social media காலத்துல இது ரொம்பவும் எளிது, நாம தான் like, comment, share, RT, heart னு நமக்கு பிடிச்சது பிடிக்காததுலாம் மொத்தமா சொல்லிடறமோ. அத data-வா கலெக்ட் பண்ணி categorize பண்ணிருவாங்க, நாம demographics (age, gender), affinity (likes, interest), location இதுபோல categorize பண்ணி, எந்த பொருட்கள் விக்கிறாங்களோ அந்தந்த consumer data access பண்ணி அவங்களுக்கு market பண்ணுவாங்க.
இது social media’ல மிக எளிது. இன்னும் சொல்லப்போனா உங்க smartphone மூலமா உங்களபத்தி எல்லாம் தெரிஞ்சுக்கொண்டு, அதற்கேத்த மாதிரி social media-ல மார்க்கெட்டிங் நடக்குது இந்த காலத்துல. ஆனா, எல்லாத்துக்கும் அடிப்படை உங்கள் உளவியல் சார்ந்த information தான்.
செந்தில் சொன்னது போல Information is Wealth; வல்லுநர்கள் இப்படி சொல்லுவாங்க, “Data is New Oil”. Data-வ கலெக்ட் பண்றதுக்கு, விற்கிறதுக்கு & வாங்குறதுக்கு உலகம் முழுக்க ஆட்கள் இருக்கு. Social Media, Aadhar Card இதெல்லாம் நம்மல பத்தின data-வத்தான் கலெக்ட் பண்ணி வித்துட்டு இருக்காங்க.
Why Aadhar Card ஆபத்தானது சொல்றாங்கன்னா இது நாளாதான், உங்க வருமானம், உங்க வங்கி கணக்கு புழக்கம், உங்க வாங்கல் விற்றல் எல்லாம் ஒரு மையத்துல ரெகார்ட் ஆயிட்டே இருக்கும். அத ஒரு கம்பெனிக்காரன் வாங்கி அவனுக்கேத்தாப்ல அந்த data-வ வைத்து அவனால் மார்க்கெட்டிங் பண்ண முடியும். எ.கா- Fintech கம்பெனி – Loan, இன்சூரன்ஸ், Mutual Funds etc., இதுபோல விக்க முடியும்.
Campaign Analytics மாதிரி டிஜிட்டல் ஏஜென்சிகள் அவங்க கிளைண்ட்சோட எலெக்சன்/பிசினஸ்ஸ டெவெலப் பண்ண ஹெல்ப்பமுடியும், தேர்தல் கட்சிகள் தங்கள் வாக்காளர்களை டார்கெட் பண்ணமுடியும். இதுமாதிரி பல பயன் இருக்கு உங்க டேட்டாவ வச்சு… அத வாங்கவும், விற்கவும் ஆட்கள் கோடிக்கணக்கில் இருக்கு.
So எல்லாத்துக்கும் அடிப்படை நம்மோட உளவியல் குறிப்பா Behavioral உளவியல் – இத அடிப்படையா வச்சுதான் உலகமுழுக்க வியாபரம்/அரசியல்/தேர்தல் நடக்குது.
நீங்க ஒரு வியாபாரம் செய்றவங்களா இருந்தாலோ, கட்சி நடத்தி தேர்தல்ல செயிக்க நினைத்தாலோ, முதல்ல நீங்க உங்க target people ஓட உளவியல் அறிந்து, அதற்கேற்றாற்போல் உங்க மார்க்கெட்டிங்/எலெக்ஷன் campaign செட் பன்னிங்கன்னா, கண்டிப்பா உங்க இலக்க அடைய முடியும்.
பொதுமக்களுக்கு நா சொல்ல விரும்புறது என்னனா. நீங்க எத வாங்க திட்டமிட்டாலும், emotional-லா இல்லாம intellectual-லா think பண்ணி வாங்குங்க. மெய்யாலுமே இது நமக்கு தேவைதானா, இதை multi-purpose-க்கு பயன்படுத்தலாமான்னு சுயவிசாரணை பண்ணி முடிவெடுங்க, ஆசைக்கில்லாம தேவைக்கு வாங்க பழகுங்க.
அதேபோல, தேர்தல்ல வோட்டு போடும்போது, இந்த கட்சி ஆட்சிக்கு வந்தா பெருவாரியான நல்லது நடக்குமா; தொழில், படிப்பு, மருத்துவம், கட்டமைப்பு போன்ற அடிப்படை வசதிகள் சீர் செய்யப்படுமா என்று கேள்விகேட்டுக்கோங்க உங்கள நீங்களே. Geo-politics/புவிஅரசியல பற்றிய தெளிவுகொள்ளுங்க.
வெறுமனே மதம், சாதி, இனம், மொழி’ன்னு எமோஷனலா திங்க் பண்ணி ஏமாறாம; பொதுநல சிந்தனையோடு, பகுத்தறிந்து யோசித்து முடிவெடுங்க. எல்லாம் நலவே நடக்கும்!
பி.கு - உளவியல் என்பது கடலைபோன்று ஆழமானது, நா டிஸ்கஸ் செய்த செய்திகள் வெறுமனே இம்மியளவு தான். இதில் ஐயமிருந்தா, மாற்று கருத்திருந்தா தயங்காம கேளுங்க, இத பத்தி இன்னும் நாம டிஸ்கஸ் பண்ணலாம்.
Read my other posts here - Index

Comments
Post a Comment