தமிழ் ஹைக்கூ கவிதைகள் | Haiku Poems in Tamil

தனிமனித தனிமை எண்ணங்களையும், அனுபவங்களையும், உணர்வுகளையும், மெய்சிலிர்க்கும் வாழ்வின் சிறு சிறு கணங்களையும் எழுத்துக்களால் சித்தரிக்கும் சப்பானிய கலையே - ஹைக்கூ!

haiku poems in tamil
Courtesy: Google

1. இதை 
    உடனே படி - உனக்கும் 
    ஹைக்கூ வரலாம்.
                      ---
2. அறிவுத்தளத்தில் 
    இயங்க ஆசைப்படும் 
    மூடன்.
                      ---
3. வைகறை அமைதி
    தூரத்தில் அழும்
    பூனையின் குரல்.
                      ---
4. காதல்
    பெண்
    கானல்.
                     ---
5. மலை உச்சியில் மழை
    கடுங்குளிர் - ஒற்றைக்
    குடிலில் அழும் குழந்தை.
                     ---
6. பழையது இடிக்கப்பட்டு 
    புது வீடு கட்டப்படுகிறது - 
    பூனை குடும்பம் குடியேற.
                     ---
7. பற்றி எரிகிறது பழைய நூல்கள்
    பனிக்கால குளிர்.
                     ---
8. பம்ப் அடிக்கும் சிறுவன்
    அதிகாலை வெயில் - காற்றில் திறந்த புத்தகம்.


Read my other posts here - Index

Comments

Popular posts from this blog

உளவியல் சுரண்டல் - Psychological Exploitation in Politics, Advertising and Marketing

#ArignarAnnaSeries #E02 - Call My State 'Tamil Nadu'