AC-ஆ? உடல்நலமா? சுற்றுசூழலா?
என்னோட புரிதல் என்னனா. Air-Conditioner (AC) பயன்படுத்தறத நிறுத்திட்டோம்னாலே, இந்த பூமி முக்கால்வாசி குளிராய்டும்.
AC வாங்க வசதியுள்ளவன்/ இல்லாதவன் எல்லோரும் மகிழ்ச்சியா இருக்கலாம். Air-Conditioner (AC) பயன்படுத்துவதால் முதலில் பாதிப்பது நம் உடல்நலம் தான்.
![]() |
| Pic Courtesy: motherjones.com |
Read:
அடுத்து நம் சுற்றுசூழல். முதலில் சொன்னதுபோல் AC பயன்படுத்துவது புவி வெப்பமயமாதலை அதிகப்படுத்தும், புவி வெப்பமயமாதலின் விளைவுகள் பற்றி உங்களுக்கே நல்லா தெரியும். AC-யை விட மின் காற்றடியே உடலுக்கும், சுற்றுசூழலுக்கும் மிகவும் நல்லது.
பருவமழை மாறிப்போச்சு, வருடாவருடம் சம்மர்’ல வெயில் கொடூரம் தாங்கமுடிலன்னு பொலம்புறோம். ஆனா அதற்கு முக்கிய காரணிகள பயன்படுத்தறத குறைக்கமாற்றோம். AC பயன்படுத்தறது ஆடம்பரம் & அனாவசியம் மட்டுமல்ல. அநியாயமும் கூட.
வீட்டுல உள்ள குப்பைய எப்படி நடுரோட்ல கொட்டுறது குற்றமோ, அப்படிதான் வீட்ல உள்ள வெப்பத்தை மொத்தமா உறிஞ்சி வெளில தள்ளுறதும். அந்த வெளில, AC வாங்க முடியாதவங்க இருக்காங்க, எண்ணற்றோர் கடந்துபோறாங்க, மற்ற உயிரினங்கள் இருக்கு. அவங்களோட அடிப்படை உரிமைய (இதமான சுற்றுசூழல) பாழ்படுத்துறது அநியாயமில்லையா.
அதான் நா சொல்லுறேன் #StopUsingAC !
Read my other posts here - Index

Comments
Post a Comment