நடுநிலை - ஒரு நடுநிலையான பார்வை?

why we must sides elie wiesel
Pic Courtesy: Google

    நடுநிலை - இன்று பெரும்பாலும், பெருவாரியான மக்கள் நடுநிலைனா எந்த சார்பும் எடுக்காம, யாருக்கும் சப்போர்ட் பண்ணாம தேமேன்னு இருக்குறததான் நடுநிலை-ன்னு நம்பிட்டுயிருக்காங்க. 
    இன்னும் சிலர் எல்லோரையும் விமர்ச்சித்து, எல்லோர்மேலயும் கல்லப்போட்டு தங்களின் நடுநிலையை அப்பப்போ நிரூபணம் வேற பண்ணிக்கிறாங்க. அப்படி இருக்குறததான் safezone-ன்னு நெனச்சிக்கிறாங்க, அதுவே தனக்கு நல்லபெயர் எடுத்துக்கொடுக்கும்னு நம்புறாங்க.
    உண்மையில் அவ்வாறு எண்ணுவது சரிதானா? நடுநிலை ஒருவனுக்கு நல்லவன் என்கிற பிம்பத்தை தருமா? -ன்னு கேட்டா உண்மையில் இல்லன்னுதான் சொல்வேன். இன்னும் சொல்லப்போனால், 
நடுநிலை என்பது
    – சோம்பேறித்தனம்
    – துணிவில்லாத்தன்மை
    – பொறுப்பற்றத்தன்மை
    – அயோக்கியத்தனம்
ஏன் சோம்பேறித்தனம்?
    சரி எது, தவறு எது-ன்னு ஆராய்றது கிடையாது.
ஏன் துணிவில்லாத்தன்மை?
    ஒரு கொள்கையையோ/கருத்தையோ நாம சார்ந்திருந்தோம்னா அதற்கு வரும் எதிர்வினைகளையும்/விமர்ச்சனங்களையும் சந்திக்க வேண்டிவரும்.
    அத தவிர்ந்துக்கொள்றதுக்கு நிறைய பேர் இந்நிலை எடுப்பதுண்டு, NOTA-க்கு ஒட்டுப்போட்டு குற்றவுணர்ச்சியே இல்லப்பான்னு சொல்லி மனச தேத்திக்கிறதுமாதிரி.
ஏன் பொறுப்பற்றத்தன்மை? 
    I think this is self-explained.
ஏன் அயோக்கியத்தனம்?
    தன்னை நல்லவனா, நடுநிலையா காட்டிக்கிறதுக்காக எல்லோர் மேலயும் கல்லவிட்டு அடிக்கிறது, அதனால வர பாதிப்ப உணராம மக்களை குழப்பிவிடுறது.
சரி, அப்போ நடுநிலை-ன்னா என்ன?
    நடுநிலைனா நாம எந்த கொள்கை/கருத்தியல சார்ந்திருக்கோமோ அதன் கோட்ப்பாடுகளை எவ்வித தற்பிடித்தமின்றி, சமரசமின்றி அதன் குறை-நிறைகளை ஆய்வது, ஆராய்வது.
    சான்றோர் பேச்சை கேட்பது, நல்ல நண்பர்களோடு கலந்துரையாடுவது, விவாதிப்பது, நல்ல புத்தகங்களை வாசிப்பது போன்ற செயல்களால் நம்ம கொள்கை/கருத்தியல்/நம்பிக்கையை சீர்த்தூக்கிப்பார்க்கிறது.
    இப்படி செய்வதின் மூலம் நாமளே நம்ம செய்றது சரியா, நம்ம நிக்கிற பக்கம் சரியான்னு நமக்கே தெரியும். சரியில்லன்னு தெரிஞ்சிக்கிட்டோம்னா, அந்த கொள்கைய விட்டுட்டு வேறு சிந்தனை/கருத்தியல் நோக்கி பயணிக்கவும் நமக்கு உதவிகரமா இருக்கும். மேலும் நம்ம சார்ந்திருக்குற அந்த கொள்கைக்கு அது பலனளிக்கவும்/அப்டேட் செய்யவும் வாய்ப்பிருக்கு. 
    அத விட்டுட்டு நடுநிலை-னு சும்மா இருந்தோம்னா, Elie Wiesel சொல்றததான் நாம செஞ்சுட்டு இருக்கோம்னு ”நடுநிலையாளர்கள்” உணரணும்.
Read my other posts here - Index

Comments

Popular posts from this blog

தமிழ் ஹைக்கூ கவிதைகள் | Haiku Poems in Tamil

உளவியல் சுரண்டல் - Psychological Exploitation in Politics, Advertising and Marketing

#ArignarAnnaSeries #E02 - Call My State 'Tamil Nadu'