குறிஞ்சிப்பாட்டு - கபிலர் | Kurincippattu - A Sanga Tamil Masterpiece on Love & Romance of Ancient Tamils #WorldBookDay
கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு | Kurincippattu by Pulavar Kapilar
குறிஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டு எனும் சங்கத்தமிழ் நூல் தொகுப்பில் ஒன்றாகும். சங்ககாலத்து தமிழ்ப்புலவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவரான கபிலர் பாடியது.
261 அடிகளைக்கொண்ட இப்பாடல் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை, குறிஞ்சி நில பூக்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மக்களின் வாழ்வு நெறிமுறைகளை, வாழ்க்கை குறிப்புகளை, காதல் ஒழுக்கங்களை நன்கு விளக்குகிறது. இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும் உண்டு.
ஆரிய அரசன் பிரகத்தன் தமிழரின் களவுநெறியைத் (திருமணத்திற்கு முன்னான காதல் மற்றும் கலவி) தீது என்றான். இது கற்புநெறியில் (திருமணத்தில்) முடியும், மிகவும் நல்லது, என்னும் உண்மைகளைத் தெளிவுபடுத்த பாடப்பட்டது.
தமிழர்தம் காதல் ஒழுக்கத்தை அறிந்துகொள்ள, குறிஞ்சித் திணை ஒழுக்கமாகிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்து இந்நூல் விளக்கியுரைக்கிறது. இதன் இறுதியில் இரண்டு வெண்பாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை இந்தப் பாடலின் தொகுப்புச் செய்திகளைக் கூறுகின்றன.
To read this ebook at Amazon Kindle - www.amazon.com/dp/B087G4P7HY/ on #WorldBookDay

Comments
Post a Comment