நான் பார்த்த பேய்கள் | My Encounter with Ghosts – 1
கான்ஜுரிங் பேயை காணும் படலம்.
ஞாயிறு காலை, ஞாயிறு உதயமாகும் நேரம். சனி இரவு நண்பர்கள் வீட்டில் ஸ்டே. சனி இரவை சரக்கில் கழித்த நண்பர்கள் தூங்க, நான் விடியும்முன் எழுந்துட்டேன். ஒரே கொசுக்கடி & போர்.
பக்கத்துக்கு ரூம்க்கு போய் ஏதாவது படம் பாக்கலாம்னு லேப்டாப்பை எடுத்தேன். கான்ஜுரிங் வந்து பிரபலமாய் ஓடிக்கொண்டிருந்த நேரமது. சரி அப்படி என்னதான் அந்த படத்துல இருக்குன்னு பாப்போம்னு அந்த படத்தை லேப்டாப்-ல போட்டேன்.
நல்லா போய்ட்டிருந்தது, அம்மா பேய், மரம், கயிறு எல்லாம் ஒரு வகை கிலியை ஏற்படுத்தியது. தனிமையிலும் திகிலோடும் பாத்தும் முடிச்சாச்சு. கொஞ்ச நேரம் அந்த பீலிங் இருந்துச்சு, அப்பறம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சு. நாட்கள் ஓடியது. திங்கள், செவ்வாய், புதன்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதும்பாங்க. எனக்கு நல்லா கிடைச்சிச்சு ஒரு அனுபவம். ஆங்கிலத்துல சொல்லனும்னா “Heart is in the Mouth”-ம்பாங்க, அப்படியொரு அனுபவம்.
மாலை இரவை நோக்கி நகர, நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். பஸ்சிலிருந்து இறங்கி ஷேர் ஆட்டோ புடிச்சி, ஏரியாவிற்குள் சென்றுகொண்டிருந்தேன்.
மணி சுமார் 8 இருக்கும். என்றும் இந்நேரத்தில் பகல்போல் பளிச்சென்று இருக்கும் கடைவீதிகள், மை இருளால் சூழப்பட்டுடிந்தது. இதுநாள்வரை அப்படியொரு இருளை நான் கண்டத்தில்லை.
பவர் கட். முழு ஏரியாவிலும் பவர்கட். எதிர்வருவோர் கூட அடையாளம் தெரியா இருள். ஆங்காங்கே சில கடைகளில் மட்டும், மெழுகுவர்த்தி வெளிச்சம். தட்டு தடுமாறி, நாய்களின் குரைப்புகளுக்கும், ஊளைகளுக்கும் நடுவே நடந்து, வீடு சேர்ந்தேன்.
வீட்டின் கேட்டை திறந்தேன். படார்.. திக்.. திக்.. திக்.. நெஞ்சு படப்படனு அடிக்கிது, நான் கண்டது நிஜமா?!
படியின் மூலையில் ஒரு குழந்தை தன் முட்டியை கையால் கட்டிக்கொண்டு, முடியால் முகத்தை மூடிக்கொண்டு அமர்திருந்தது. அப்படியே, கான்ஜுரிங்ல வந்த அதே குழந்தை. பாத்தவுடனே இதயம் படபடபடன்னு அடிக்கிது. மூச்சு வாங்குற அளவுக்கு. ஒரு நிமிடம் ஒன்னுமே புரியல.
![]() |
| Pic Courtesy: aminoapps.com |
Literally felt “Heart is in the Mouth” moment. வலக்கையால இட பக்க நெஞ்சபிடிச்சிக்கிட்டு, அந்த குழந்தைய தொடபோனே. பயந்து பயந்து நடந்து, கை நீட்டி நெருங்கிபோனேன். தொடுறதுக்கு. தொடப்போகும்போது மேல இருந்து ஒரு சத்தம்.
“டேய்ய்ய்ய்”-னு.
அம்மா மேலிருந்து flashlight அடிச்சு, பாத்து படில ஏறிவா-னு. வெளிச்சம் வந்ததும் அந்த மூலைய திரும்பிப்பாத்தேன். சாமான் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் சாக்குபைய, யாரோ அங்க சாத்தி வைச்சிட்டு போயிருக்காங்க.
அடப்பாவிங்களா-னு மனசுக்குள்ளே நெனச்சுக்கிட்டு போய்ட்டேன் வீட்டுக்குள்ள. இதுதான் நான் பார்த்த முதல் பேய். அந்த பேய் எப்படி இருந்ததுனு கூகுளில் தேடி படம் போடலாம்னு நினைச்சேன். முடில. பயம்.
இந்த சம்பவத்தை எழுதும்போது கூட பயந்து பயந்து தான் எழுதுனேன். பின்னாடி யாரோ நிக்கிற மாதிரி ஒரு உணர்வு இதை டைப்பும்போது கூட உணர்றேன். திரும்பவே பயம். நீங்களும் திரும்பி பாக்காதிங்க. இரண்டாவது சம்பவம் இன்னொரு நாள் பாப்போம். (to be cont…)
Read my other posts here - Index

Comments
Post a Comment