இரவு தூக்கத்திற்கானது.
முன்தூங்கி முன்னெழுவதே உடலுக்கும், மனதிற்கும் மிக நல்லது. ஆனா, இப்போ காலம் போகப்போக இது அப்படியே மாறிட்டு வருது. லேட்டா தூங்கி, லேட்டா எழுறது இன்னைக்கு ரொம்ப காமனா பரவிட்டு வருது. எந்தளவுக்குனா, சின்ன வயசுலயிருந்து சீக்கிரமே தூங்கி சீக்கிரமே எழுந்து பழக்கபட்டவங்க கூட,இன்னைக்கு லேட்டா தூங்குறாங்க.
இரவு தூக்கம் எவ்ளோ முக்கியம்னு சொல்லித்தெரிய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். சரியா தூங்கலனா மனிதனோட மனம், உடல் ரெண்டுமே ஹெவியா டேமேஜ் ஆய்டும். Stress, Depression, Bipolar Disorder போன்ற உளவியல் நோய்களும் சாத்தியம்.
நீயா நானா’ல நைட் ஷிஃப்ட் job பத்தின விவாதத்துல கூட ஒரு டாக்டர் சொன்னாரு நைட் கண் முழிச்சா எவ்ளோ பாதிப்புகளை உண்டாக்கும். காலைல தூங்கி காம்பென்செட் பண்ண முடியுமா?
No, மெலடோனியன் ஹார்மோன் சுரக்குறதுக்கு முக்கியமான நேரம் இரவுதான். இரவின் இருள்ல தான் அது சுரக்கும்னுலாம்.
இவர் சொல்ற biological clock, circadian rhythm, sleep cycle சார்ந்த ஆய்வுக்குதான் “2017 – The Nobel Prize in Physiology or Medicine” அவார்ட் பண்ணாங்க.
இப்போ பரவலா தூக்கமின்மைக்கு முக்கிய காரணமா சொல்லப்படுறது, “Our Eyes’ Exposure to Digital Lights at Night.” அதாவது, அதீதமாக ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் போன்றவை பயன்படுத்தலின் விளைவுனு ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
பிரச்சனையும் தெரிஞ்சாச்சு, அதன் காரணமும் அறிஞ்சாச்சு, இனி என்ன செய்யணும்னு நாம தான் முடிவு பண்ணனும்.
டிச்கி: காதல்/தனிமை/வெறுமை/கவலை/கலப்பு/களிப்பு போன்ற உணர்வுசார் தூக்கமின்மை காரணிகள் இதில் விவாதிக்க படவில்லை.
Comments
Post a Comment